சர்வதேச பிரீஸ்டைல் செஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சர்வதேச பிரீஸ்டைல் செஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதினர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் காலலிறுதிக்கு முன்னேறினர். இதன் கால் இறுதி சுற்று ஒன்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்தான் வீரரான நோடிர்பெக் அப்துசத்தோரோவுடன் மோதினார்.
முதல் ரேபிட் ஆட்டத்தில் வெற்றியும், 2-வது ஆட்டத்தில் டிராவும் செய்த அர்ஜுன் எரிகைசி போட்டியின் முடிவில் 1.5-0.5 என்ற கணக்கில் நோடிர்பெக் அப்துசத்தோரோவை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் அர்ஜுன் எரிகைசி படைத்துள்ளார்.காலிறுதியின் மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரரான பிரக்ஞானந்தா அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம் 3-4 என்ற கணக்கில் தோல்வி கண்டாா்.