காஞ்சுரிங் 4 ஸ்பாய்லர்களை சொன்னதால் வாக்குவாதம் - தியேட்டரில் இருவர் கைகலப்பு!
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட திகில் படங்களில் ஒன்று 'தி கான்ஜுரிங்'. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தின் வெற்றியையடுத்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்தியாவிலும் காஞ்சுரிங் படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் இந்த காஞ்சுரிங் படவரிசையில் கடைசி படமான ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகியது.
இதில் முந்தைய பாகங்களில் நடித்த பேட்ரிக் வில்சன் மற்றும் வேரா பார்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் வார இறுதியில் ₹ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள எந்த திகில் படத்திற்கும் இல்லாத அதிகபட்ச வசூல் ஆகும்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (நேற்று) இரவு புனேவை சேர்ந்த 29 வயது ஐடி ஊழியர் ஆஷிக் என்பவர் அவரது மனைவியுடன் ஒரு மல்டிபிளெக்ஸ் தியேட்டரில் ‘தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' படத்தை பார்க்கச் சென்றிருந்தனர். அப்போது ஆஷிக் அவரது மனைவியிடம் படத்தின் கதையை சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து பின் வரிசையில் அமர்ந்திருந்த அபிஷேக் என்பவர் படத்தின் Spoiler-களை கூறாதீர்கள் என்று எச்சரித்தார்.
அனால் அதனை பொருட்படுத்தாமல் ஆஷிக் தனது மனைவியிடம் படத்தின் Spoiler-களை கூறி வந்தார். இதனை தொடர்ந்து அபிஷேக்கிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாகி உள்ளது. படத்திற்கு இடையே இருவரும் தாக்கி கொண்டனர். இதில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.