Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புரோட்டாவிற்கு சால்னா கேட்டு தகராறு... ஹோட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து! நடந்தது என்ன?

11:57 AM Oct 09, 2024 IST | Web Editor
Advertisement

கோவையில் புரோட்டாவிற்கு சால்னா கேட்டு, ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் சாலை பகுதியில் பல்வேறு பிரியாணி
உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆபிதா என்ற
பிரியாணி கடைக்கு சென்ற இருவர், புரோட்டாவிற்கு சால்னா கேட்டு கூச்சலிட்டதாக
தெரிகிறது. உடனடியாக ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா, இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களுக்கு வேண்டியதை தர முற்பட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் இருவரும் ஆத்திரமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பேசிக்கொண்டிருக்கும்போதே, அதில் ஒருவர் கத்தியால் ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லாவை தாக்கியுள்ளார். இதனால் பதற்றமைந்த கடையின் ஊழியர்கள், உடனடியாக உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்டவர்களை அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் இச்சம்பவத்தில்
ஈடுபட்டவர்கள் கரீம் மற்றும் சமீர் என்பது தெரிய வந்தது.

பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
covaiCrimeparotta
Advertisement
Next Article