For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கீங்களா.? இதை ட்ரை பண்ணுங்க!

02:43 PM Nov 11, 2023 IST | Student Reporter
தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கீங்களா   இதை ட்ரை பண்ணுங்க
Advertisement

தீபாவளி என்றால் பட்டாசு மட்டுமல்ல,  இனிப்பும் நினைவிற்கும் வரும்.  சில ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே பலகாரம் செய்வதற்கான பொருட்களை வீட்டிலே தயார் செய்து,  அக்கம் பக்கத்தினருடன் இனிப்புகளை பகிர்ந்து கொண்டு மகிழ்வதுண்டு.

Advertisement

அந்த வகையில் வீட்டில் செய்யப்படும் பலகாரம் குறித்து இத்தொப்பில் கூறப்படுள்ளது.

1. மொறு மொறு முறுக்கு:

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து,  இளம் சூட்டில் சூடேற்றவும்.  இதில் உளுந்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும்.  இதை ஆறிய பின்னர் அரைத்து வைத்துக் கொள்ளவும்.  இப்போது உளுந்து மாவு, மிளகாய் பொடி, பெருங்காயம், சீரகம்,  அரிசி மாவு,  நெய் மற்றும் எள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

இப்போது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசையவும்.  பிசைந்த மாவை அப்படியே உருண்டை பிடித்து எடுக்கவும். அந்த உருண்டைகளை முறுக்கு அச்சு உள்ளே வைத்து, பிழிவதன் மூலமாக பச்சை மாவு அச்சுகளை பெறவும்.

பிறகு கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றவும்.  எண்ணெய் நன்றாக சூடேறியதும் அதில், இந்த முறுக்கு அச்சுகளை ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்.  முறுக்கு நல்ல பொன்னிறமாக மாறும் வரை வேக விடவும்.  அவ்வப்போது திருப்பி விட்டு,  நன்றாக வேக வைக்கவும்.  இறுதியாக முறுக்கை எடுத்து ஆற வைத்து, காற்று புகாத கண்ணாடி ஜாரில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளவும்.

2. பக்குவமான அதிரசம்:

முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து ஊற வைக்கவும்.  பின்னர் தண்ணீரை வடித்து சுத்தமான துணியில் பரப்பி உலர விடவும்.  அதனை பிறகு ஈரப்பதத்துடன் அரைத்து கொள்ளவும்.  பின்னர் வெல்லம் எடுத்து அதனை நன்றாக நுனிக்கி காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாவு சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவு ஒரு நாள் முழுவதும் ஊற வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு மாவு எடுத்து , மிதமான சூட்டில் கடாயில் போட்டுலேசாக சிவந்ததும் திருப்பி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து விடவும். அதிலிருந்து என்ன வெளியேறுமாறு ஒரு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் பிறகுசுட்ட அதிரசத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்காமல் தனித்தனியாக வைக்கவும். ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும். சுவையான வெல்ல அதிரசம் தயார்.

3. இனிப்பான லட்டு

முதலில் லட்டு செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதனுள் சம்பா கோதுமை ரவையை இரண்டையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் மற்றொரு கடாயில் தண்ணீர் மூன்று கப் ஊற்றி அதனுள் வறுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவையை போட்டு நன்கு வேக விட வேண்டும்.  அந்த ரவை நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்.

அதன் பின்பு ஒரு கப் சீனி, ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு, ஃபுட் கலர் இவற்றை சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். கிளறிய பின்பு மேலும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கி வைக்க வேண்டும்.

இந்த கலவை நாம் உருண்டை பிடிப்பதற்கு ஏற்ற வண்ணம் சூடுஆறிய பின்பு நமக்கு தேவையான முந்திரி, பாதாம் அல்லது நமக்கு பிடித்த வேறு பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவையான லட்டு தயார்.

4. குண்டு குண்டு குலாப் ஜாமூன்

முதலில் ஒரு பாத்திரத்தில்  குலோப் ஜாம்மாவைக் கொட்டி அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மெதுவாக பக்குவமாக பிசைந்து கொள்ளவும்.  பின்னர், தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு  சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக பக்குவமாக உருட்டிஎண்ணெயில் போடவும்.
உருண்டைகள் இரண்டு புறமும் பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் சர்க்கரைப் பாகில் போடவும். அதன் மேலே சிறு பிஸ்தா துண்டுகளை வைத்தால் உங்கள் இனிப்பான, சுவையான குலோப் ஜாம் தயார்.
Tags :
Advertisement