ஊருக்கு போறீங்களா? இது தெரியாம ரயிலில் போகாதீங்க.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இந்த ரயில்களில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். விரைவு பயணம் மற்றும் குறைந்த செலவு காரணமாக தொலைதூரம் செல்பவர்பகள் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். பயணிகள் தங்களுடன் லக்கேஜ் எடுத்துச் செல்வது வழக்கம்.
குறிப்பாக கல்வி, வேலை உள்ளிட்டவைகளுக்காக வெளி ஊர்களில் தங்கி இருப்பவர்கள் பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் போதும், அங்கிருந்து திரும்பும் போதும் அதிகப்படியான லக்கேஜை எடுத்துச் செல்வர். இந்த நிலையில், ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எத்தனை கிலோ வரை லக்கேஜ் எடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏசி முதல் வகுப்பு பயணிகள் - 70 கிலோ
ஏசி 2-ம் வகுப்பு பயணிகள் - 50 கிலோ வரை
ஏசி 3-ம் வகுப்பு பயணிகள் - 40 கிலோ
முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் - 40 கிலோ
2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் - 35 கிலோ
மேற்குறிப்பிட்ட அளவிலான லக்கேஜ்களை பயணிகள் கட்டணமின்றி இலவசமாக ரயில்களில் எடுத்துச் செல்லலாம். நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான லக்கேஜ் எடுத்து வரும் பயணிகளுக்கு ஒவ்வொரு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்காணிப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.