ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? அப்போ கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க...
குளிர்ந்த நீரை அதிகளவு குடிப்பதால் உடலில் ஏற்படும் பிரச்னைகளை இங்கு காணலாம்.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்படுகின்றனர். வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை, வேர்க்குரு, அரிப்பு, தேமல், அம்மை, வயிற்றுப் பிரச்னை போன்றவை ஏற்படும்.
வெயிலினால் நம் உடலில் அதிகளவு நீரிழப்பு ஏற்படுகிறது. இதனால் நாம் வெளியில் செல்லும் போது அதிகமாக தாகம் எடுக்கிறது. பொதுவாக கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் பருக வேண்டும். ஆனால் ஐஸ் வாட்டர் அதாவது குளிர்ந்த நீரை குடிப்பதையே பலரும் விரும்புகின்றனர்.
குளிர்ந்த நீர் அல்லது பானங்கள் குடிக்கும் போது நமது தாகத்தை தணிக்கவும், புத்துணர்ச்சியுடன் உணர வைக்கவும் உதவுகிறது. ஆனால் குளிர்ந்த நீரை அதிகளவு குடித்தால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
குளிர்ந்த நீர் பருகுவதால் ஏற்படும் பிரச்னைகள்!
- உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். நாம் குளிர்ந்த நீரை அருந்தும் நேரத்தில், இந்த வெப்பநிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உடல் ஆற்றலை வெளியேற்றும் நோக்கில் இயங்குகிறது. அதாவது குளிர்ந்த நீர் உடலில் சமநிலையின்மையை (ஏற்றத்தாழ்வு) ஏற்படுத்தும்.
- சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பது எரிச்சல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
- குளிர்ந்த நீர் ரத்த நாளங்களை சுருங்கச் செய்து, தொண்டைப் பகுதிக்கு ரத்த ஓட்டத்தைக் குறைக்கும்.
- குளிர்ந்த நீர்பருகுவதால் செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
- குளிர்ந்த நீரை தொடர்ந்து குடிப்பது இதய துடிப்பதை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது.
- குளிர்ந்த நீர் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பை எரிப்பதைத் தடுக்கிறது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- இதனால் பல்லில் பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது.
- குளிர்ந்த நீரை அதிகமாக குடிப்பதால் மூளை உறைதல் பிரச்னை ஏற்படும்.
இதனால் குளிர்ந்த நீரை தவிர்த்து, இயற்கையான பானங்கள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.