For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உடல் எடையை குறைக்கும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையை மேற்கொள்பவரா நீங்கள்! இதோ உங்களுக்கான செய்திதான் இது!

10:15 PM Mar 19, 2024 IST | Web Editor
உடல் எடையை குறைக்கும் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையை மேற்கொள்பவரா நீங்கள்  இதோ உங்களுக்கான செய்திதான் இது
Advertisement

உடல் எடை குறைப்பில் பிரபலமான முறைகளில் ஒன்றான இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் இதயக்கோளாறை ஏற்படுத்தி இறப்புக்கு வழிவகுக்கும் என்று ஆய்வொன்றில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Advertisement

உடல் எடையை குறைத்து எப்படியாவது சரியான உடற்கட்டை எட்டிவிட விட வேண்டும் என்பது இன்று பலரது கனவாக உள்ளது. இதற்காக பலவிதமான உணவு கட்டுப்பாடுகள் ,  விரத முறைகள், உடற்பயிற்சிகள், வீட்டு வைத்தியங்கள் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். இந்த வகையில் 8 மணி நேரத்திற்குள் மட்டும் உணவருந்தி 16 மணி நேரம் பட்டினி கிடக்கும் உடல் எடை குறைப்பு முறையான இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறையும் அனைவராலும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இதய கோளாறால் இறப்பு ஏற்படுவதை இந்த இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் முறை 91% அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. இதில் ஷாங்காய் ஜியோ டாங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விக்டர் ஜோங் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் சுமார் 20,000 பேரிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், 2003 முதல் 2019 வரை உயிரிழந்தோரின் தரவுகளும் கணக்கில் கொள்ளப்பட்டன. குறிப்பாக இவர்கள் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் என்ன உணவருந்தினார்கள் என்று கணக்கில் கொள்ளப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களில் பாதி பேர் ஆண்கள் என்றும், அவர்களும் 48 வயதை கடந்தோர் எனவும் தெரியவந்தது.

தொடர் ஆய்வில் இந்த இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் மேற்கொள்வோருக்கு இதய பாதிப்பு சிக்கல்கள் ஏற்பட 91 சதவிகிதம் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்தது. இந்த ஆய்வு முடிவானது அமெரிக்க இதய பாதுகாப்பிற்கான கூட்டமைப்பின் சார்பில் சிகாகோவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

Tags :
Advertisement