For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குரூப் 4 தேர்வு எழுதியவரா நீங்கள்..? - உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

08:32 PM Sep 11, 2024 IST | Web Editor
குரூப் 4 தேர்வு எழுதியவரா நீங்கள்      உங்களுக்கான மகிழ்ச்சி செய்தி
Advertisement

குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த 6224 பணியிடங்களுடன் கூடுதலாக 480 காலிப் பணியிடங்களை இணைத்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடந்தது. குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும் 6,244 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது.சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.

இதையும் படியுங்கள் : வினேஷ் போகத்துக்கு எதிராக முதல் WWE வீராங்கனையை களமிறக்கிய #AamAadmi கட்சி!

இதற்கிடையே இந்த முறை புதியதாக இன்வேலிட் மதிப்பெண் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கேள்விக்கு தவறான பதிலை டிக் செய்து, பிறகு அதை அடித்துவிட்டு, வேறு ஒரு பதிலைத் தேர்வு செய்தால், அந்த கேள்விக்கான மதிப்பெண், மதிப்பற்றதாக (இன்வேலிட்) கருதப்படும். இந்த முறை நடப்பாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நடைபெற்று முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதல் 480 காலி பணியிடங்கள் இணைக்கப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதல் 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement