For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளநீர் வழுக்கை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

11:56 AM Apr 30, 2024 IST | Web Editor
இளநீர் வழுக்கை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா
Advertisement

இளநீர் வழுக்கை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

Advertisement

கோடை காலத்தில் தாகம் தணிக்க உதவும் வெள்ளரி, நுங்கு, தர்பூசணி உணவுகளில் இளநீரும் ஒன்று.  இளநீரில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.  உடலை குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும் பண்பு இளநீருக்கு உண்டு.  ஆனால், அதில் உள்ள வழுக்கை இளநீரை விட நமக்கு நன்மை பயக்கும்.  வழுக்கையில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, சி போன்ற பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளன.  இளநீர் வழுக்கை உண்பதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது பற்றி இங்கு காணலாம்.

  • கோடைக்காலத்தில் வரும் பல உடல்நல தொந்தரவுகளுக்கு இளநீர் வழுக்கை  நல்ல மருந்தாக இருக்கும்.  தேங்காய் வழுக்கை கோடைக்காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்னை, நெஞ்சு எரிச்சல், வயிற்று மந்தமாக உணர்தல் போன்றவற்றை போக்கும்.
  • வழுக்கை குறைந்த கலோரியை கொண்டதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • தினமும் இளநீர் வழுக்கையை உட்கொள்வதால், நம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.
  • இது பலவீனமான உடலுக்கு உற்சாகமூட்டுகிறது.  குறிப்பாக கர்ப்பிணிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
  • இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் வயிறு நிரம்பிய உணர்வை கொடுத்து, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தடுக்கிறது.

  • இதிலுள்ள புரோட்டீன் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • இளநீர் வழுக்கை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • இளநீர் உடல் சூட்டை குறைப்பது போலவே இளநீரில் உள்ள வழுக்கையும் உடல் சூட்டைக் குறைக்க உதவும்.  மேலும் உடல் உறுப்புகளில் உஷ்ணம் சேராமல் உடல் வெப்பதை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
  • இளநீர் வழுக்கை குடல் பாக்டீரியாவை வலிமையாக்க உதவுகிறது.
Tags :
Advertisement