For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

06:16 PM Apr 26, 2024 IST | Web Editor
நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா
Advertisement

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி இங்கு காணலாம்.

Advertisement

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.  வெயிலின் தாக்கத்தால் வியர்வை,  நீரிழப்பு,  வேர்க்குரு,  அரிப்பு,  தேமல்,   அம்மை,  வயிற்றுப் பிரச்னை போன்றவை ஏற்படும்.  கோடை காலத்தில்  குழந்தைகள்,  கர்ப்பிணிகள்,  முதியவர்கள் ஆகியோர் அதிக அளவு பாதிப்படக்கூடிய வாய்ப்புள்ளது.

வெப்பம் வாட்டி வதைப்பதால்,  உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.  கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது.  இதனால்,  உடலை நீரோற்றமாக வைத்திருக்க உதவும் மோர், சிட்ரஸ் பழங்கள், வாழைப்பழம், வெள்ளரிக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.  இதில் நுங்கு வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்ககூடிய ஒன்று.

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றி இங்கு காணலாம்.

  • நுங்கு உடல் உஷ்ணத்தைப் போக்கி,  நீர்ச்சத்தை அதிகரிக்கிறது.
  • கோடை காலத்தில் பரவும் அம்மை நோய்களை தடுக்கிறது.
  • நுங்கு சாப்பிட்டால் கோடை காலத்தில் வரும் கொப்பளம், வேர்க்குரு மறையும்.
  • நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
  • நுங்கு சுளைகளை சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு , தோல் நோய்கள், கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு, போன்ற பிரச்னைகள் நீங்கும்.
  • கர்ப்பிணி பெண்கள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம், மலச்சிக்கல், படபடப்பு போன்ற பிரச்னைகள் நீங்கும்.

  •  நுங்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • வெயில் காலத்தில் எவ்வளவு நீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை என்றால் தேவையான அளவு நுங்கு சுளையைச் சாப்பிட்டால் தாகம் அடங்கும்.
  • இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
  • நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் ரசாயனம் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கும்.
  • நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் தோல் நோய்கள் நீங்குவதுடன், சருமத்தையும் பாதுகாப்பும்.
  • அதனுடன் கூந்தலையும் ஆரோக்கியமா வைத்துக்கொள்ள உதவுகிறது.
  • நுங்கினை மேல் தோலினை நீக்காமலும் சாப்பிடலாம்.
  • நுங்கு இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.  இதனால், சர்க்கரை நோய் இருக்கக்கூடியவர்கள் ஒரு நாளைக்கு மூன்றிலிருந்து 4 நுங்கு சாப்பிடலாம்.
Tags :
Advertisement