கோடையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
12:35 PM May 08, 2024 IST | Web Editor
Advertisement
கோடையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம்.
Advertisement
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெப்ப நோய்களைத் தடுப்பது மிகவும் முக்கியமானது.
கோடை காலத்தில் மனித உடலுக்கு அடிக்கடி நீரேற்றம் தேவைப்படுகிறது. அதன்படி, உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கோடை காலத்தில் முழு நெல்லிகாய் சாப்பிட்டால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதன்படி, நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம்.
- நெல்லிக்காய் உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
- இதனை ஜூஸ் செய்து பருகலாம். இதனால் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கும். அதோடு உடலின் உட்புற வெப்ப சமநிலையை முறையாக பராமரிக்க உதவும்.
- நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- கோடை காலத்தில் நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் பருவகால தொற்றுகளில் இருந்து தப்பலாம்.
- நெல்லிக்காய் சாப்பிட்டால் செரிமானம் மேம்படுகிறது. மேலும், இரைப்பை குடல் ஆரோக்கியம் பெறுகிறது.
- நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படுகிறது.
- நெல்லிக்காயில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. மேலும் நாள்பட்ட நோய்கள் தாக்குவதை தடுக்கிறது.
- நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நமது உடலில் கொலஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதனுடன் இளமையான தோற்றத்தையும் தருகிறது.
- நெல்லிக்காய் தலைமுடி நன்றாக வளரவும், எளிதில் உடைந்து போகாமல் இருக்கவும் உதவுகிறது.
- ஏதாவது உடல்நலப் பிரச்னைகள் இருந்து, அதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டு இருந்தால், மருத்துவரையின் அறிவுரைக்குப் பிறகே நெல்லிக்காயை உணவில் சேர்க்க வேண்டும்.