For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா?

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
07:00 PM Feb 20, 2025 IST | Web Editor
ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனையில் இருப்பதாக வைரலாகும் படங்கள் உண்மையா
Advertisement

This News Fact Checked by ‘The Quint

Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற இரண்டு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பும்ராவுக்கு கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாகி வருகின்றன. இதேபோன்ற கூற்றுக்களை முன்வைக்கும் பிற இடுகைகளின் காப்பகங்களை இங்கே மற்றும் இங்கே காணலாம் 

இந்தக் கூற்று உண்மையா?:

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த கூற்று உண்மையில்லை மாறாக தவறானது, ஏனெனில் இந்தப் படங்கள்  செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

எப்படி கண்டுபிடித்தோம் ?:

முதலில், வைரலாகும் இந்த புகைப்படங்களின் பின்னணி சற்று மங்கலாக இருப்பதைக் கவனித்தோம். இந்தப் படங்கள் AI உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான முதல் அறிகுறியாக இது இருந்தது. இதனைத் தொடர்ந்து பும்ராவின் சமூக ஊடகக் கணக்குகளைத் தேடினோம், ஆனால் இது போன்ற எந்த புகைப்படத்தையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. அடுத்து, SiteEngine மற்றும் Hive Moderation போன்ற AI-கண்டறிதல் வலைத்தளங்களில் இந்தப் படங்களைச் சரிபார்த்தோம்.

சைட் என்ஜின்: இந்தப் படங்கள் 99% AI உதவியுடன் உருவாக்கப்பட்டவை என்று முடிவு செய்தது.

ஹைவ் மாடரேஷன்: இந்த படங்கள் AI-கண்டறிதல் வலைத்தளம், இந்தப் படங்கள் AI உதவியுடன் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளது.

இது தவிர, இந்தப் படம் AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்ற தலைப்பில் பல பதிவுகளை ஃபேஸ்புக்கில் கண்டோம். முகமது சுல்பிக்வார் என்ற பயனர் , அவரது Facebook சுயவிவரம் டிஜிட்டல் கிரியேட்டர் பிரிவில் இருந்தது. வைரலான புகைப்படங்களைப் போன்ற புகைப்படங்களை அவர் பதிவேற்றியிருந்தார். Quint's WebQoof குழு, உண்மையான படங்களாகப் பரப்பப்படும் AI-ஆல் உருவாக்கப்பட்ட படங்களை இதற்கு முன்பும் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நீங்கள் இங்கே படிக்கலாம்.

முடிவு:

மருத்துவமனை படுக்கையில் பும்ரா இருப்பது போன்ற செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்கள் உண்மையானவை என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இது தவறானது.


Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement