For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ‘நரச்ச முடி’ பாடலை வெளியிடும் ஏ.ஆர்.ரஹ்மான்!

12:28 PM Nov 04, 2023 IST | Web Editor
‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ‘நரச்ச முடி’ பாடலை வெளியிடும் ஏ ஆர் ரஹ்மான்
Advertisement

‘துருவ நட்சத்திரம்’  திரைப்படத்தின் ‘நரச்ச முடி’ பாடலை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார். 

Advertisement

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம்,  ஐஸ்வர்யா ராஜேஷ்,  ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.  இந்த திரைப்படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகியும் சில பிரச்னைகள் காரணமாக வெளிவராமல் உள்ளது.

இந்நிலையில்,  கடந்த வருட இறுதியில் திரைப்படம் வெளிவரும் என இயக்குநர் கெளதம் மேனன் அறிவித்தார்.  அதன்படி தற்போது இந்தத் திரைப்படம் இந்த வருடம் நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி,  தற்போது புதிய போஸ்டர் ஒன்றும் டிரெய்லர் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்ரன்,  ராதிகா,  சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ‘துருவ நட்சத்திரம்’  திரைப்படத்தின் ‘நரச்ச முடி’ பாடலை இன்று மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடுகிறார்.
Tags :
Advertisement