‘சூர்யா 45’-ல் இருந்து விலகிய ஏஆர் ரஹ்மான்... இணைந்த இளம் இசையமைப்பாளர்!
‘சூர்யா 45’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கங்குவாவைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா45’. இப்படத்தை நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். இதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் லப்பர் பந்து புகழ் சுவாசிகாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.
தொடர்ந்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. சூர்யா 45 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாக படத்தின் அறிவிப்பு போஸ்டரிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏஆர் ரஹ்மான் படத்தில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாய் அபயங்கள் லோகேஷ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.
'கட்சி சேர', 'ஆச கூட' ஆல்பம் பாடல்களால் இசையமைப்பாளராக, பாடகராகக் கவனிக்கப்பட்ட சாய் அபயங்கர் தற்போது ‘சூர்யா 45’-க்கு இசையமைக்கிறார்.