Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.1ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது!

10:12 PM Nov 28, 2023 IST | Web Editor
Advertisement

அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் திறனை கண்டறிவதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Advertisement

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தோ்வில் வெற்றி பெறுபவா்களில் 1,500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதன்படி நிகழாண்டுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த அக்டோபா் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வில் மொத்தம் 2 லட்சத்து 20,880 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதுதவிர அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசால் முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிளஸ் 1 மாணவா்களில் ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்வா் திறனாய்வுத் தோ்வு அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் திறனை கண்டறிவதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

Tags :
11th examgovt schoolnews7 tamilNews7 Tamil UpdatesstudentsTn student
Advertisement
Next Article