Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் - #TNGovt உத்தரவு!

07:47 PM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு அரசு 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார், குமரி மருத்துவக்கல்லூரி முதல்வராக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி முதல்வராக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags :
DeanMedical Collegenews7 tamiltamil naduTN Govt
Advertisement
Next Article