Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுகவில் அமைப்புச் செயலாளர்கள் நியமனம்!

அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நால்வரை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
06:31 PM Jan 28, 2025 IST | Web Editor
அதிமுக அமைப்புச் செயலாளர்களாக நால்வரை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement

முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, முல்லைவேந்தன், முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி ஆகியோர் அதிமுக அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாஜகவில் இருந்து விலகி, மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயனுக்கும் அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில், செ.ம.வேலுசாமி (முன்னாள் அமைச்சர், கோவை), முல்லை வேந்தன் ( முன்னாள் அமைச்சர், தருமபுரி), வி.மைத்ரேயன் (முன்னாள் எம்.பி. தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டம்), ஆர். சின்னசாமி (முன்னாள் எம்.பி., சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோவை மாநகர் மாவட்டம்) ஆகியோர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
ADMKedappadi palaniswamiEPSSecretaries
Advertisement
Next Article