For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

01:51 PM Dec 19, 2023 IST | Web Editor
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி  தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு
Advertisement

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கின.

அதிகனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பொதுமக்கள்  வெள்ளநீரில் சிக்கி உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கனமழை பாதிப்பு – தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 4 பேரை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
  • சாத்தான்குளம் மற்றும் காயல்பட்டினம் பகுதிகளுக்கு வணிகவரித் துறை அமைச்சர் . பி. மூர்த்தி மற்றும் பதிவுத் துறை தலைவர் த தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உள்ளிட்டோரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
  • தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன் நியமனம்.
  • மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் ஆகியோர் நியமனம்.
  • இவர்களுடன் கூடுதலாக சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஷ் அகமது, மற்றும் சிப்காட் மேலாண்மை இயக்குநர் கே.செந்தில்ராஜ் ஆகியோர் நியமனம்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருடன் இணைந்து மீட்பு, நிவாரணப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதை ஒருங்கிணைத்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
Advertisement