For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

09:22 PM May 27, 2024 IST | Web Editor
 18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்    தெற்கு ரயில்வே அறிவிப்பு
Advertisement

18 ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. 

Advertisement

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 14 ரயில் நிலையங்களில் நடைமுறையில் உள்ள முன்பதிவு இல்லாத டிக்கெட் வழங்கும் தானியங்கி இயந்திரங்களை கூடுதலாக 18 ரயில் நிலையங்களில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், திண்டுக்கல், பழனி, காரைக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், கல்லிடைக்குறிச்சி, மானாமதுரை, கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், புதுக்கோட்டை, சாத்தூர், செங்கோட்டை, மதுரை, திருச்செந்தூர், தூத்துக்குடி, போடிநாயக்கனூர், புனலூர் ஆகிய ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் வழங்க இயந்திரம் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “தேர்தல் பத்திரத்துக்கான மாற்று வழி குறித்து நாடாளுமன்றத்தில் முடிவு செய்ய வேண்டும்” – அமித்ஷா பேட்டி!

கமிஷன் அடிப்படையில் முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் விற்பனை இயந்திரத்தை இயக்குவதற்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

Tags :
Advertisement