மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு – அதிமுக அறிவிப்பு!
09:20 AM Feb 19, 2024 IST
|
Web Editor
உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Advertisement
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விண்ணப்ப தேதியை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Advertisement
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ,
“நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புவோர், அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் (பிப். 21) முதல் மார்ச் 1-ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வழங்கப்படும்.
Next Article