For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடப்பாண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்!

12:35 PM Feb 11, 2024 IST | Web Editor
நடப்பாண்டு நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்
Advertisement

இளநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  இத்தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

Advertisement

நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.  அதன்படி,  2024-2025-ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும்.  இந்த தேர்வு 3 மணி நேரம் 20 நிமிஷம் நடைபெறும்.  தேர்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்படும். இந்த நிலையில் இந்தத் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  இந்த தேர்வுக்கு மார்ச் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.  இந்த தேர்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவுக்கு ரூ.1,700-ஆகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,600-ஆகவும், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு ரூ.1,000-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகையுடன் ஜிஎஸ்டி, சேவைக் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.  இது தொடர்பான கூடுதல் தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement