Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! -அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

08:08 AM Feb 08, 2024 IST | Web Editor
Advertisement

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியின் கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில்  எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு TANCET நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதுபோல எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கும் CEETA  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அந்த வகையில் 2024- 2025 ஆம் கல்வியாண்டிற்கான TANCET மற்றும் CEETA  நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. டான்செட் மற்றும் சீட்டா ஆகிய தேர்வுகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளத்தில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்து வழங்கியுள்ளது.

அந்த வகையில், வரும் 12 ஆத் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் எழுத உள்ள மாணவர்களும் இந்த தேர்வுக்கு பதிவு செய்யலாம் என்றும் இதற்கு மதிப்பெண் சான்றிதழ் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

எம்.சி.ஏக்கு விண்ணப்பிப்போருக்கு மார்ச் 9ஆம் தேதி காலையிலும், எம்.பி.ஏக்கு விண்ணப்பிப்போருக்கு அதே தேதி பிற்பகலிலும் தேர்வு நடைபெறும். முதுநிலை பொறியியல் படிப்புக்கான சீட்டா தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுகள் மாநிலம் முழுவதும் 14 நகரங்களில் நடத்தப்படவுள்ளது.

Tags :
Anna universityCEETAEducationEntrance ExamsTANCET
Advertisement
Next Article