ஆப்பிள் ஐபோன் விற்பனை 89.5 பில்லியன் டாலராக சரிவு...
ஆப்பிள் ஐபோனின் விற்பனை நான்காவது காலாண்டில் 89.5 டாலர் பில்லியனாக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது.
ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும்.
சமீப காலமாக ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தும், ஆப்பிள் ஐபோனின் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. ஜூலை - செப்டம்பர் காலத்தில் ஆப்பின் ஐபோனின் விற்பனை 10 சதவீதம் குறைந்து 89.5 டாலர் பில்லியனாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உடன் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன்கள் வாங்க விதிக்கப்பட்ட தடையால் விற்பனை சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.