இந்தியாவில் #IPhone16 உற்பத்தி தொடக்கம் எப்போது?
ஐபோன் 16 சீரிஸை சில தினங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது புதிய ஐபோன் 16 மாடலை கடந்த மாதம் 9ம் தேதி வெளியிட்டது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் போன்ற மாடலை வெளியிட்ட ஆப்பிள் நிறூவனம் அவற்றுடன் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 போன்ற சாதனங்களையும் வெளியிட்டது.
இதையடுத்து, இந்தியாவில் ஆப்பிள் தனது ஐபோன் 16 சீரிஸ் விற்பனையை கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கியது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட கிட்டத்தட்ட 60 நாடுகளில் இன்று விற்பனையை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு அறிமுகமாகியிருக்கும் ஐபோன் 16 சீரிஸ் இந்திய உற்பத்தியில் ஆப்பிள் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் சில வாரங்களில் இந்த மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : $206.2 பில்லியனாக அதிகரித்த சொத்து மதிப்பு | உலகின் 2வது பணக்காரானார் #MarkZuckerberg!
இதையடுத்து, இந்தியாவில் ஐபோன் 16 அடுத்த ஆண்டின் மத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இதையடுத்து, வரும் மாதங்களில் சில்லறை விற்பனைக் கடைகளைத் திறக்கும் திட்டங்களையும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.