For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்" - சிலை உடைந்த விவகாரம் தொடர்பாக #PMModi கருத்து!

05:33 PM Aug 30, 2024 IST | Web Editor
 சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன்    சிலை உடைந்த விவகாரம் தொடர்பாக  pmmodi  கருத்து
Advertisement

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தில் கடவுளான சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிரா சிந்துதுர்க் மாவட்டம் மால்வானில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை கடந்த ஆண்டு டிச. 4-ம் தேதி கடற்படை தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த 35 அடி உயரமுள்ள சிவாஜி சிலை ஆக. 26 இடிந்து விழுந்தது. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த விவகாரத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்த சம்பவம் குறித்து அந்த மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசும்போது, சிலை இடிந்து விழுந்ததற்கான சரியான காரணத்தை கண்டுபிடிப்பதாக உறுதியளித்தார். மேலும் அதே இடத்தில் சத்ரபதி சிவாஜியின் சிலையை மீண்டும் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். சிலை உடைந்து விழுந்த சம்பவத்தில் சிலையை கட்டிய ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் இடிந்த சத்ரபதி சிவாஜி சிலை குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே “பலத்த காற்று வீசியதால்தான், சிலை இடிந்து விழுந்தது என்று அரசு கூறியிருப்பது வெட்கக்கேட்டின் உச்சம். மாநில அரசை எதிர்த்து, மகா விகாஸ் அகாதி கூட்டணிக் கட்சிகளின் தலைமையில் செப். 1-ம் தேதியில், தெற்கு மும்பையில் உள்ள ஹுதாத்மா சௌக்கில் இருந்து இந்தியாவின் நுழைவாயில் வரை அணிவகுத்துச் செல்லவுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சரத் பவார் “சிலையை நிறுவுவதற்கு கடற்படையின் அனுமதி அவசியம் என்பதால் கடற்படையை குற்றம் சாட்டுவதன் மூலம் அரசாங்கம் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. இந்த சிலையை உருவாக்கத்திலும் ஊழல் நடந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் ஊழல் உச்சத்தை எட்டியுள்ளது என்பது தெரியவருகிறது’’ என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது..

“ 2013ல் பாஜக என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபோது ராய்காட்டில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜின் சமாதிக்கு முன் அமர்ந்துதான் எனது புதிய பயணத்தைத் தொடங்கினேன். சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயர் அல்ல. சிலை உடைந்த விவகாரத்தில் நான் என் கடவுளான சத்ரபதி சிவாஜி மகராஜிடம் தலை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement