"இந்த முறை மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்" - சிவகங்கையில் சீமான் பேச்சு!
கருணாநிதி மகன் ஸ்டாலின், ஸ்டாலின் மகன் உதயநிதி என்பதை தவிர
இருவருக்கும் வேறு என்ன தகுதியிருக்கிறது முதல்வராகவும், அமைச்சராகவும்? என
நாம் தமிழர் கட்சி ஒருஙகினைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி என்பவர்
வேட்பாளராக களம் காண்கிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை அரண்மனைவாசலில்
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக அங்குள்ள வீரமங்கை வேலுநாச்சியார்
மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர்,
“நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் பிள்ளைகள் எளிமையான பிள்ளைகள் இவர்களுக்கு உங்களின் வலியும், வேதனையும் தெரியும். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகன் மு.க.ஸ்டாலின் என்பதைவிட, முதலமைச்சராக மு.க.ஸ்டாலினுக்கு வேறு என்ன தகுதி உள்ளது. அதேபோல் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி என்பதை காட்டிலும் வேறு என்ன தகுதி இருக்கிறது அவருக்கு அமைச்சராக. ஒரே ஒரு தகுதியை சொல்லுங்கள் நான் அரசியலை விட்டே சென்று விடுகிறேன்.
அதேபோல் அதிமுக எடப்பாடியார் கட்சியா? அவர் குடும்பத்தை சேர்ந்த 4 பேராவது
அவரது கட்சியில் சேர்ந்திருப்பார்களா? எம்ஜிஆர் என்கிற பிரம்மாண்ட நடிகரால்
ஆரம்பிக்கப்பட்டு, கொடி, சின்னம் கொண்டுவரப்பட்டு அதற்கு பின்னர் அம்மையார்
ஜெயலலிதாவால் தொடரப்பட்டு வந்த கட்சியில் தன்னை தலைவராக காட்டி வருகிறார்
எடப்பாடி பழனிசாமி. திமுகவும் கருணாநிதியின் கட்சி அல்ல. அது பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி. ஆனால் நாம் தமிழர் கட்சி அப்படியா? இது உங்கள் பிள்ளைகளின் கட்சி.
புதிதாக இந்த முறை மாற்றம் வரனும் பாரு, மாற்றம் வரனும் பாரு” என பாட்டு பாடி
நூதனமுறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.