#SriLankaElections | காலை 9 மணியளவில் இலங்கை அதிபாராக பதவியேற்க உள்ளார் அநுர குமார திசாநாயக்க!
கொழும்புவில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் விழாவில், அநுர குமார திசாநாயக்க பதவியேற்கிறார்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இறுதியில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.44 விழுக்காடு வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்க, நான்காவது இடத்தை நமல் ராஜபக்சவும், 5வது இடத்தை தமிழர்களின் பொது வேட்பாளரான அரியநேந்திரன் பாக்கியசெல்வமும் பிடித்தனர்.
கொழும்புவில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் எளிமையான விழாவில், அநுர குமார திசாநாயக்க பதவியேற்கிறார்.