Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கென்யாவில் வரிவிதிப்பு எதிர்ப்பு போராட்டம்! 39 பேர் பலி, 360-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

06:57 PM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement

கென்யாவில் வரிவிதிப்பு எதிர்ப்பு போராட்டத்தால் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

Advertisement

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரிஉயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் போராட்டத்தில் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உறுதி செய்துள்ளது.

ஜூன் 18 முதல் ஜூலை 1-ம் தேதி வரையிலான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 32 பேர் மாயமாகி உள்ளதாகவும், 620-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டது உள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததாக வில்லியம் ரூடோ தெரிவித்திருந்தார். இதற்கு அரசு காரணம் இல்லை என்றும், இதுகுறித்து முறையான விசாரணை நடப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என சமூக வலைதளத்தில் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் மீது வெளிக்காட்டப்பட்ட அடக்குமுறையை ஒருபோதும் மறக்க முடியாது. பாதுகாப்பு படைகளை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது கண்டிக்கத்தக்கது என கென்ய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கென்யா கடும் நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. வெளிநாட்டு கடனும் உச்சத்தில் உள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர வரிகளை உயர்த்த அந்நாட்டின் அதிபர் வில்லியம் ரூடோ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தில் உள்ளநிலையில்,  இந்த முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags :
Finance Bill 2024KenyaKNCHRProtest
Advertisement
Next Article