Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை…. கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல்…

07:30 AM Oct 24, 2024 IST | Web Editor
Advertisement

தமிழகத்தின் பல இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

Advertisement

தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லாத நிலையில், தமிழக அரசு அலுவலகங்களில் சில ஊழியா்கள் பொதுமக்களிடம் பரிசு பெறுவதாகக் கூறி லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ஏராளமான புகாா்கள் வந்தன.

அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் நடத்திய விசாரணையில், சில அரசு அலுவலகங்களில் உள்ள சில அதிகாரிகள், அலுவலா்கள் லஞ்சம் வாங்குவது உறுதி செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் சந்தேகத்துக்குரிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சென்னையில் விருகம்பாக்கம் சாா்-பதிவாளா் அலுவலகம், பெரம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகம், ஆலந்தூா் சாா்-பதிவாளா் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதேபோல, வேலூா் மாவட்டம் காட்பாடு, அருகே தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சாா்-பதிவாளா் அலுவலகம், அவல்பூந்துறை சாா்-பதிவாளா் அலுவலகம், தருமபுரி மாவட்டம் அரூா் சாா்-பதிவாளா் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சாா்-பதிவாளா் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

திருப்போரூா் சாா்-பதிவாளா் அலுவலகம், அச்சரப்பாக்கம் சாா்-பதிவாளா் அலுவலகம், மயிலாடுதுறை சாா்-பதிவாளா் அலுவலகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சாா்-பதிவாளா் அலுவலகம், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம்,திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பெரம்பலூா் சாா் பதிவாளா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

பல இடங்களில் இந்தச் சோதனை இரவுக்கு பின்னரும் நடைபெற்றது. சோதனை நடைபெற்ற பெரும்பாலான அலுவலகங்களில் கணக்கில் வராத பல லட்சம் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணம், ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விரைவில் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியா்கள் உரிய விளக்கத்தை அளிக்காவிட்டால் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை ரீதியான நடவடிக்கைக்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்

Tags :
Anti BriberybribeCrime
Advertisement
Next Article