Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.1.40லட்சம் பறிமுதல்!

08:22 AM Jan 23, 2024 IST | Web Editor
Advertisement

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு
போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 1.40லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் உள்ள நாகம்மா புதூர்
பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து, அது குறித்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை லஞ்ச ஒழிப்பு ஏ. டி. எஸ். பி திவ்யா தலைமையில் ஆறுக்கும் மேற்பட்ட லஞ்ச
ஒழிப்பு போலீசார் அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பத்திர பதிவு மற்றும் அதற்கான கட்டணம் சரியாக
உள்ளதாக அல்லது லஞ்சம் பெறபட்டுள்ளதா என பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களிடம் என விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கிய இந்த சோதனை நேற்று (டிச.22) காலை வரை நடைபெற்றது. இச்சோதனையில் கணக்கில் வராத 1.40லட்சம் ரூபாய் ரொக்க பணம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

இது குறித்து, அன்னூர் சார் பதிவாளரான செல்வ பாலமுருகன் மீது துறை ரீதியான
நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
AnnurCoimbatoreDiroctorate Of Vigilance & Anti corruptionNews7Tamilnews7TamilUpdatesSub Registrar Office
Advertisement
Next Article