For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஓபிஎஸ் Vs "5 ஓபிஎஸ்" | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

04:57 PM Mar 27, 2024 IST | Web Editor
ஓபிஎஸ் vs  5 ஓபிஎஸ்    ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி
Advertisement

ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிட உள்ள நிலையில், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இதையும் படியுங்கள் : நாட்டில் வேலையில்லாதவர்களில் விகிதம் 83% உயர்வு ! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த சூழலில் ராமநாதபுரம் தொகுதியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஓச்சப்பன் என்பவர் மகன் பன்னீர்செல்வம், ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அத்துடன்,  ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கு காட்டூர் பகுதியைச் சார்ந்த ஒய்யாரம் மகன் ஓ. பன்னீர்செல்வம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.  இதே போல் மேலும் 2 ஓ.பன்னீர்செல்வம் என்பவர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனால் ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் இதுவரை 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே மேலும் 4 பேரை திமுக கூட்டணி களமிறக்கி இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த எம்.பன்னீர் செல்வம் என்பவர் இன்று ( 27.03.2024) வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Tags :
Advertisement