டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட நில அதிர்வு! - பொதுமக்கள் அச்சம்
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது.
டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. வடக்கு டெல்லியில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கீழே நிலநடுக்கத்தின் மையம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
ரிகடர் அளவுகோளில் 2.6-ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வால் பொதுமக்களுக்கோ, கட்டடங்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை. நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகரான டெல்லியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படியுங்கள்: 'ரிபெல்' படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் சூர்யா!
நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் சில பகுதிகளில் உணரப்பட்டது. அதனையடுத்து கடந்த நவ. 6-ம் தேதி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.6 ஆக பதிவாகியிருந்த நில அதிர்வு 5 முதல் 10 விநாடிகள் வரை டெல்லியில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்போது மீண்டும் டெல்லியில் இன்று லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.