ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு - 4 பேர் பலி!
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் அங்கு அடிக்கடி மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தின் கஹாராவில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. சாலைகள் மற்றும் நடைபாதை பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தோடாவில் கடந்த 24 மணி நேரத்தில், வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் இறந்ததாகவும், தொடர் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரி தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சசோட்டி கிராமத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பால் 65 பேர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.