Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திரா, தெலாங்கானாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,448 கோடி அறிவிப்பு! #UnionMinister சிவராஜ் சிங் சவுகான் தகவல்!

11:05 AM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,448 கோடி வழங்கப்படும் என வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலங்களின் நிவாரணத்திற்காக பல நடிகர்களும் நிதி அளித்தனர். இந்நிலையில் இரு மாநிலங்களுக்கும் வெள்ள நிவாரண நிதியாக ரூ.3,448 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் தெலங்கானா சென்ற அவர், மீனவலு, பெத்தகோபவரம், மண்ணூர், கட்டலேரு ஆகிய பகுதிகளில் வெள்ள பாதித்த பகுதிகளை விமானம் வழியாக மேற்பார்வையிட்டார்.

தொடர்ந்து இதுகுறித்து அவர் பேசியதாவது:

“ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை அடைந்தார். யாரும் ஏமாற்றம் அடைய தேவையில்லை. உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். மத்திய அரசின் பங்கையும் சேர்த்து, மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், 3,448 கோடி ரூபாய் உடனடி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்பின் விவசாயிகளுக்கு உரம் மற்றும் விதைகள் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். பயிர் சேதத்தை மதிப்பிட்டு உரிய இழப்பீட்டை அரசு வழங்கும். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து கடன்தொகையை வசூலிக்க வேண்டாம் என வங்கிகளை அறிவுறுத்துவோம்” என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Tags :
Andhra PradeshFloodMinister Shivraj Singh ChouganTelangana
Advertisement
Next Article