Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனமழை எதிரொலி | பெரியார், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

08:58 PM Dec 01, 2024 IST | Web Editor
Advertisement

கனமழை காரணமாக நாளை பெரியார் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 29ம் தேதி உருவான ஃபெஞ்சல் புயல், இன்று மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனிடையே, புயலானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருப்பதாகவும், 24 மணி நேரத்தில் முழுமையாக வலுவிழக்கும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள் : கனமழை எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

பல்வேறு வட மாவட்டங்களுக்கு கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பல்கலைக்கழக நாளை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Tags :
AnnounceChennai Universityexams postponedheavy rainsnews7TamilUpdatesTamilNaduTNRains
Advertisement
Next Article