For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் - தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் கைது !

12:55 PM Dec 26, 2024 IST | Web Editor
அண்ணா பல்கலை  மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்   தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் கைது
Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியதின் பேரில் தமிழக பாஜக சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் அண்ணா பல்கலைக்கழக மனைவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்வதை கண்டித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு பெண் மட்டுமல்ல தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு போராடி தான் வருவேன். அதாவது போராட்டத்திற்கு வந்த போலீசார் அங்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கலாம். பாதுகாப்பு கொடுத்து இருந்தால் பெண் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார். இது அடக்குமுறையா இல்லை நாங்கள் எல்லாம் தீவிரவாதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement