For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி!

01:58 PM Nov 17, 2023 IST | Web Editor
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50  உயர்வு  மாணவர்கள் அதிர்ச்சி
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டண உயர்வின்படி,  இளங்கலை படிப்புகளுக்கான செய்முறை,  எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ஒரு தாளுக்கு ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில்,  50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதே போன்று இளங்கலை ப்ராஜெக்ட் தீசிஸ் தேர்வுக்கான கட்டணம் ரூ.300 இல் இருந்து ரூ.450 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

முதுகலை செய்முறை மற்றும் அனைத்து எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.450 இல் இருந்து ரூ.650 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அதேபோன்று முதுகலை ப்ராஜெக்ட்டின் ஒவ்வொரு நிலைக்கும் கட்டண் ரூ.600 இல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.  அதாவது, இளங்கலை, முதுகலை மதிப்பெண் சான்றிதழ்,  தற்காலிக சான்றிதழ்,  இளங்கலை பட்டம் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.1000 இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோன்று தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகளின் கட்டணமும் ரூ.1,500 -ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த கட்டண உயர்வுகளுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இதையடுத்து 50 சதவிகித தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
Advertisement