Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#specialarrearexam : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

11:15 AM Aug 25, 2024 IST | Web Editor
Advertisement

நீண்ட காலமாக அரியர் வைத்திருப்போர் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை மறுதேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் கீழ் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு இறுதி வாய்ப்புகளாக சிறப்பு செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்டன. அதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் சிறப்பு அரியர் தேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி 2024 நவம்பர்/டிசம்பர் மாதங்களிலும், 2025 ஏப்ரல்/மே மாதங்களிலும் சிறப்பு அரியர் தேர்வுகள் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. நவம்பர்/டிசம்பர் மாத சிறப்பு அரியர் தேர்வுக்கு மாணவர்கள் வருகிற 30-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை https://coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு தேர்வு கட்டணமாக ரூ.5 ஆயிரமும் வசூலிக்கப்படும்.

இதையும் படியுங்கள் : #Chennai -யில் விநாயகர் சிலை கரைப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தேர்வு மையங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சிறப்பு அரியர் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் சென்னை, விழுப்புரம், ஆரணி, சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Anna universityarrear examdistance educationnon autonomous
Advertisement
Next Article