#RelianceHomeFinance மோசடி விவகாரம் | அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம் - செபி உத்தரவு!
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானிக்கு செபி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அண்மையில், முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்தது. அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ.6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : America ஸ்டான்போர்ட் பல்கலை. எல்சிவியர் தரவரிசை பட்டியல்! திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5 பேர் தேர்வு!
இந்நிலையில், இன்று(செப்.,24) ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் இயக்குனர்களின் முடிவுக்கு மாறாக நிறுவன கடன்களுக்கு ஒப்புதல் அளித்த புகாரில், தொழில் அதிபர் அனில் அம்பானி மகன் ஜெய் அன்மோலுக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து செபி அமைப்பு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. ரூ.1 கோடி அபராதத்தை 45 நாட்களுக்குள் ஜெய் அன்மோல் அம்பானி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.