Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆண்டி ஐயா, அக்கினி வீரபத்திரர், திருவாளி கருப்பு, காளியத்தாள் கோயில் மாசி களரி திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

10:12 AM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement

சிவகங்கை அருகே ஆண்டி ஐயா, அக்கினி வீரபத்திரர், திருவாளி கருப்பு, காளியத்தாள் திருக்கோயில் மாசி களரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Advertisement

சிவகங்கையை அடுத்துள்ள சோழபுரம் கிராமத்தில் ஆண்டி ஐயா, அக்கினி வீரபத்திரர், திருவாளி கருப்பு, காளியத்தாள் திருக்கோயில் எழுந்தருளியுள்ளது. இந்த கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசிதிபெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் மாசி மாதம் நடைபெறும் களரி விழா  வெகு விமரிசையாக நடைபெறும் என்பதால், இந்த கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செலுத்துவர்.

இதையும் படியுங்கள் : நாம் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க நினைக்கிறது பாஜக -கனிமொழி எம்பி!

இதையடுத்து, இந்த ஆண்டு மாசி மாதம் 25 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். மேலும், இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்தும் அழகு குத்தியும், தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து இங்குள்ள தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும் தங்களது குழந்தைகளுக்கு காது குத்தியும் சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்த நிலையில், பாதுகாப்பு பணிக்காக 100 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

Tags :
Agini VeerapatrarAndi AyadevoteesKaliyathal TempleMasi Kalari FestivalSami DarshanTiruvali Karupu
Advertisement
Next Article