Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆந்திரா: காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு!

விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில், கார் கதவு பூட்டிக் கொண்டதால் அதில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
10:08 AM May 19, 2025 IST | Web Editor
விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில், கார் கதவு பூட்டிக் கொண்டதால் அதில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
Advertisement

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தை சேர்ந்த உதய் (8), சாருமதி (8), சரிஷ்மா (6), மனஸ்வி (6) ஆகிய நான்கு சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தபோது மகளிர் மன்ற அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் அவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரிய வந்தது.

Advertisement

இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து நான்கு பேரையும் மீட்ட பெற்றோர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். காருக்குள் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணமடைந்த சாருமதி மற்றும் சரிஷ்மா ஆகியோர் சகோதரிகள் ஆவர்.

இந்த சம்பவத்தால் துவாரபூடி கிராமத்தில் துக்கச் சூழல் நிலவியது. மரணமடைந்த சிறுவர், சிறுமிகளின் பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Tags :
Andhra Pradeshcarchildrenplaying
Advertisement
Next Article