ஆந்திரா: 250 வகை உணவுகளுடன் புது மாப்பிள்ளைக்கு விருந்து!
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களை
சேர்ந்தவர்கள் விருந்தோம்பலில் நீண்ட காலமாக முதன்மை நிலையில் இருந்து
வருகின்றனர் என்று கூறுவது மிகை ஆகாது. உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு மட்டுமல்லாமல் நண்பர்கள், நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் ஆகியோர் அவர்களுடைய வீடுகளுக்கு விருந்தினராக சென்றால் கூட அவர்களுடைய விருந்தோம்பல் தூக்கலாகவே இருக்கும்.
கிருஷ்ணா மாவட்டம் சித்துபூர் கிராமத்தை சேர்ந்தவர் சாய்நாத். சாய்நாத்தின் சகோதரி
நவ்யாவுக்கும், ரேவந்த் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமண நடைபெற்றது. அவர்கள் தற்போது கொச்சியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சங்கராந்தியை முன்னிட்டு ரேவந்த் தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதையும் படியுங்கள்: மதுரா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கு – ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
புது மாப்பிள்ளையை அசத்த முடிவு செய்த சாய்நாத் 250 வகையான உணவுப் பொருட்களை தயார் செய்து சகோதரிக்கும் அவருடைய கணவனுக்கும் சங்கராந்தி விருந்தாக பரிமாறி அசத்தினார். ஆந்திராவில் சங்கராந்தி சமயத்தில் இது போன்ற விருந்துகள் நடைபெறுவது வழக்கம்.