"பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்" - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "பாட்டாளி மக்கள் கட்சியின் 1.9.2025 ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததின் முடிவின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பி வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.
இதனால் அன்புமணி மீது குற்றச்சாட்டப்பட்ட அனைத்தும் உண்மையானவை என கருதப்படுவதால் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
அன்புமணியை நீக்கியதன் மூலம் கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும் கட்சி விரோத நடவடிக்கையில் பிற்காலத்தில் எவரேனும் ஈடுபட்டதால் இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கட்சி அமைப்புகள் விதிகள், ஜனநாயக விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி உடன் உள்ளவர்கள் தனி கட்சியாக செயல்படுவதை போல் இருக்கின்றனர்.
அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்க தாயாரக உள்ளேன். அன்புமணியுடன் உள்ள பத்து பேருக்கும் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் உதவி செய்து வளர்த்துவிட்டனர். வளர்த்து விட்டவர்களை யாரென்று சொல்ல விரும்பவில்லை, மூத்தவர்கள் நான்கு ஐந்து பேர் அன்புமணிக்கு அறிவுரை கூறியபோது அதை கேட்காமல் அன்புமணி செயல்பட்டார். மரியாதைக்குரிய பழ கருப்பையா தந்தையிடம் மகன் தோற்பது தோல்வி அல்ல தந்தை சொல்லை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என அழகாக பழ கருப்பையா தெரிவித்திருக்கிறார்.
பாமகவை 45 ஆண்டுகள் ஓடி ஓடி உழைத்து ராந்தல் விளக்கில் கஞ்சியோ, கூழோ குடித்து 96 ஆயிரம் கிராமங்கள் சென்று கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கி வளர்த்தேன். தனி மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சியில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. அது பிள்ளையாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் கட்சி விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை விவாதித்து கடிதம் அனுப்பட்டது. அதற்கு கடிதத்தை பெற்றுகொண்டு பதில் ஏதும் அளிக்காததால் இந்த முடிவை தெரிவிப்பதாக கூறினார்.
அன்புமணியை நீக்கிய முடிவு பாமகவிற்கு பின்னடைவு கிடையாது, பயிர் செய்தால் களை முளைக்க தான் செய்யும். அதனால் பயிர் செய்யாமல் இருக்க முடியாது, கட்சியின் வளர்ச்சிக்கு குந்தமாக இருந்த அன்புமணியை நீக்கிவிட்டேன், அன்புமணி கட்சியை தொடங்கினாலும் அந்த கட்சி வளராது. செயல் தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை" என்று தெரிவித்துள்ளார்.