தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் - 25ம் தேதி தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்;
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வரும் 25-ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு 1. சமூக நீதிக்கான உரிமை (Right to Social Justice), 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை (Women's Right to Live Free from Violence) 3. வேலைக்கான உரிமை (Right to Employment) 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை (Right to Farming & Right to Food) 5. வளர்ச்சிக்கான உரிமை (Right to Development) 6.நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை (Right to Good Governance and Public Services), 7. கல்வி நலவாழ்வுக்கான உரிமை (Right to Health & Right to Education) 8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை (Right to be Free from Alcohol & Drug Harm) 9. (Right to Sustainable Urban Development) 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை (Right to a Healthy Environment) ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பன தான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கங்களாகும்.
பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை சென்னை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்தப் பயணத்தின் முதல்கட்ட விவரங்கள் வருமாறு:
ஜூலை 25 - திருப்போரூர் (நிகழ்ச்சி தொடக்க விழா)
ஜூலை 26 - செங்கல்பட்டு, உத்திரமேரூர்
ஜூலை 27 காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் (காலை: வையாவூர் நத்தப்பேட்டை ஏரிகள் மாசுபாடு பார்வையிடல் நெசவாளர்களுடன் சந்திப்பு)
ஜூலை 28 அம்பத்தூர், மதுரவாயில் (காலை: குப்பை எரிஉலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாத்தூர்)
ஜூலை 31 - கும்மிடிப்பூண்டி (காலை: அறிவுசார் நகரம் பார்வையிடல்)
ஆகஸ்ட் 1 திருவள்ளூர், திருத்தணி
ஆகஸ்ட் 2 - சோளிங்கர், ராணிப்பேட்டை
ஆகஸ்ட் 3 ஆர்காடு, வேலூர் (காலை: ராணிப்பேட்டை குரோமியம் மாசு பார்வையிடல்)
ஆகஸ்ட் 4 வாணியம்பாடி, திருப்பத்தூர்
அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது.