அம்பானி மகன் திருமணத்தில் பங்கேற்கும் விருந்தினர்களுகான Dress Code!
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கான "டிரஸ் கோடு" குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன. ஜாம்நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் உலக கோடீஸ்வரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஆடம்பரமான நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் 2024 – தேர்தல் அறிக்கை தயாரிக்க பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது பாஜக!
இந்நிலையில், மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்பு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக விருந்தினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு முன் நடைபெற இருக்கும் விழாக்களில் தொழில் அதிபர்கள், பாடகர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விழாவிற்கு வருகை தர இருக்கும் விருந்தினர்களுக்கான ஆடைக் குறியீடுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளின் முதல் நிகழ்விற்கு "எ வாக் ஆன் தி வைல்ட் சைட்" என்று பெயரிடப்பட்டுள்ளது. "காட்டுக் காய்ச்சல்" ஆடைக் குறியீட்டு மற்றும் இரண்டாவது நிகழ்விற்கு, "மேலா ரூஜ்" ஆடைக் குறியீட்டில் விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
நிறைவு நாளில் "டஸ்கர் டிரெயில்ஸ்" என பெயரிட்டுள்ள முதல் நிகழ்வில் "சாதாரண சிக்" ஆடைக் குறியீட்டு மற்றும் இரண்டாவது நிகழ்விற்கு, இந்திய ஆடைக் குறியீடு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.