Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் திருமணம் : ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பெட்டி தொகுப்பு!

09:51 AM Jul 13, 2024 IST | Web Editor
Advertisement

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்டு, ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு ஒரு பரிசுப் பெட்டி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் மகள் ராதிகாவிற்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் நேற்று (ஜூலை 12) நடைபெற்றாலும் கடந்த ஒரு மாத காலமாக இவர்களுடைய திருமண நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக உலகையே வியந்து பார்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்தனர். திருமண கொண்டாட்டங்கள் நேற்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகின்றன. முக்கிய திருமண சடங்குகள் நேற்று திருமண விழாவுடன் தொடங்கியது. இந்தத் திருமண நிகழ்வுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரையில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, ஆடம்பர பரிசுகளுடன் நடத்தப்படுகையில், ரிலையன்ஸ் ஊழியர்களும் விழாவைக் கொண்டாட ஒரு பரிசுப் பெட்டி தொகுப்பை பெற்றுள்ளனர்.

திருமணத்திற்கு முன்னதாக ஊழியர்கள் பெற்ற இந்த பரிசு தொகுப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர். சிவப்பு பரிசுப் பெட்டியில் தங்க நிறத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில்,"எங்கள் தேவி மற்றும் தேவதைகளின் தெய்வீக அருளால், நாங்கள் ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்தை கொண்டாடுகிறோம். நல்வாழ்த்துக்களுடன், நீடா மற்றும் முகேஷ் அம்பானி" என குறிப்பிடப்பட்டிருந்தது.

பெட்டியின் உள்ளே ஹல்திராமிஸின் நம்கீனின் நான்கு பாக்கெட்டுகள், இனிப்புப் பெட்டி மற்றும் ஒரு வெள்ளி நாணயம், நம்கீன் பாக்கெட்டுகளில் ஹல்திராமின் ஆலு பூஜியா சேவ் மற்றும் லைட் சிவ்டா ஆகியவை அடங்கும்.

Tags :
| radhika merchantambaniAnant AmbaniAnant Radhika WeddingMarriageMumbaiNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article