Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!*

இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு நிறைந்த அனகோண்டா திரைப்படம் வெளியாகிறது.
12:00 PM Sep 23, 2025 IST | Web Editor
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு நிறைந்த அனகோண்டா திரைப்படம் வெளியாகிறது.
Advertisement

ஹாலிவுட்டில் வெளியாகும் அவெண்ட்சர் படங்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்றோஉ உள்ளது. அதிலும் அன்கொண்டா, காட்சில்லா,கிங்காங்மற்றும் ஜாச் போன்ற அனிமல் அட்வெண்ட்சர் படங்கள் இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளத்கை கொண்டுள்ளான. குறிப்பாக அனகோண்டா (1997) மற்றும் அனகோன்டாஸ் : தே ஹுண்ட் பார் தே ப்ளூட் ஆர்க்கிட் (2004) ஆகிய படங்கள் 90 கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வகையில்  அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!*

Advertisement

பால் ரூட் மற்றும் ஜாக் பிளாக் நடித்த இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

'அனகோண்டா'வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகுகின்றன.

டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த ஜங்கிள் மூவியை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒரு ராட்சத அனகோண்டா அவர்களின் ஆர்வத்தை முறியடிக்கிறது. இதனால், இருவரும் திரைப்படம் எடுப்பதை விட அமேசான் காடுகளில் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

பரபரப்பு, அட்வென்ச்சர், நகைச்சுவை, ஆக்‌ஷன் என பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் என 'அனகோண்டா' உறுதியளிக்கிறது.

இந்தப் படத்தில் ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர் மற்றும் செல்டன் மெல்லோ ஆகியோரும் நடித்துள்ளனர். பிராட் புல்லர், ஆண்ட்ரூ ஃபார்ம், கெவின் எட்டன் மற்றும் டாம் கோர்மிகன் ஆகியோர் 'அனகோண்டா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா டிசம்பர் 25, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'அனகோண்டா' திரைப்படத்தை வெளியிடுகிறது.

Tags :
anacondachristmasreleasecinemanewslatestNews
Advertisement
Next Article