#LateralEntryadvertisement: தேதி குறிப்பிடாமல் கடிதம்...மத்திய அமைச்சரை விமர்சித்த காங்கிரஸ்!
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சி தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தேதி குறிப்பிடாமல் இருந்ததை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை மத்திய அரசுப் பணியில் நேரடியாக நியமிக்கப்படும் நடைமுறைக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வானும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேரடி நியமனத்துக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்த கடிதத்தில் தேதி குறிப்பிடப்படாமல் இருப்பதை விமர்சித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“பிரதமரின் கீழ் பணிபுரியும் ஒரு மத்திய அமைச்சர், அரசியலமைப்பு அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லை. என்ன ஒரு கேவலமான ஆட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.