Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் உயிரிழப்பு!

கேரளாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
08:42 PM Jan 10, 2025 IST | Web Editor
கேரளாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisement

கேரளாவில் யானை தாக்கியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement

கேரள மாநிலம் மலப்புரத்தில் நேற்று முன்தினம் (ஜன.8) மசூதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திருவிழாவிற்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. திருவிழாவின் போது யானையை ஊர்வலமாக கூட்டி சென்றனர். ஊர்வலமாக சென்று கொண்டிருந்த யானைக்கு திடீரென மதம் பிடித்தது.

யானைக்கு மதம் பிடித்ததும் அருகிலிருந்த பொது மக்களை தாக்க தொடங்கியது. யானையிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடிய பொது மக்கள் ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதில் எழூரைச் சேர்ந்த கிருஷ்ணகுட்டி என்பவரை யானை தனது தும்பி கையால் தூக்கி வீசியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி 10) உயிரிழந்தார்.

Tags :
AttackElephantKeralaold man
Advertisement
Next Article