பாலக்கோடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு!
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியக்காரன் கொட்டாயில் காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள
ஜெர்த்தலாவ் ஏரியில் ஒற்றை ஆண் காட்டுயானை முகாமிட்டு இருந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களாக சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் காட்டு யானை தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்துள்ளது. இதனால், விவசாய நிலங்களில் உள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால், கிராம மக்கள் அச்சத்துடனே இருந்தனர்.
இதையும் படியுங்கள் : திருவொற்றியூர் வட்டப்பாறை வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
இந்நிலையில், நேற்று ஏரியில் உள்ள நீரில் யானை குளித்து கொண்டிருந்த காட்சியை அவ்வழியாக சென்றவர்கள், கிராம மக்கள் கண்டு ரசித்து வந்தனர். காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியில் பாலக்கோடு வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். யானை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, நேற்று இரவு தீர்த்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்(70) என்பவர்
அவருடைய விவசாய நிலத்திருக்கு சென்றுள்ளார். அப்போது காட்டு யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரின் உடலை மீட்ட வனத்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.